For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் சூர்யா 44-ன் க்ளிம்ஸ் வீடியோ!

04:35 PM Jul 23, 2024 IST | Web Editor
ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் சூர்யா 44 ன் க்ளிம்ஸ் வீடியோ
Advertisement

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா44 படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சூர்யாவின் திரை வரலாற்றில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக ‘கங்குவா’ அமைந்துள்ளது.

கங்குவா படத்திற்கு பின் சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் சூர்யா நடிப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் நடிக்கவில்லை. இதனையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் விடுதலை 2 படத்தின் வேலைகளால் அந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி முடிந்தது.

இந்த நிலையில், சூர்யாவின் பிறந்த நாளான இன்று சூர்யா 44 படத்தின் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிகரெட் புகைத்தபடி, சூர்யா நடந்து வரும் காட்சி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆக்ஷன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகும் என்றும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement