For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயலான் படத்தின் ‘சுரோ சுரோ’ பாடல் வெளியானது!

06:44 PM Jan 07, 2024 IST | Web Editor
அயலான் படத்தின் ‘சுரோ சுரோ’ பாடல் வெளியானது
Advertisement

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தின் ‘சுரோ சுரோ’ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

‘இன்று நேற்று நாளை’ புகழ் இயக்குநர் ரவிக்குமாரின் 2வது திரைப்படம் அயலான். நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும்,  4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்டு ஒரு முழு ஆக்ஷன் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனிடையே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், அயலான் படத்தின் 3வது பாடலான சுரோ சுரோ பாடல் இன்று மாலை 4.02 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், அயலான் படத்தின் ‘சுரோ சுரோ’ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement