For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சூர்யாவுக்கு வில்லனாகும் அமீர்? - வாடிவாசல் அப்டேட்!

02:04 PM Nov 28, 2023 IST | Web Editor
சூர்யாவுக்கு வில்லனாகும் அமீர்    வாடிவாசல் அப்டேட்
Advertisement

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.‌

Advertisement

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’. சூர்யா மற்றும் வெற்றிமாறன் முதன் முறையாக இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. வெற்றிமாறன் தற்போது ’விடுதலை2’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இன்னொரு பக்கம் நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவாவுடனான ’கங்குவா’ படத்தில் பிஸி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை வாடிவாசலில் சூர்யா காளைகளை அடக்குவது போன்ற இதன் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது.

அடுத்த வருடம் தொடங்க இருக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் அமீர் இருப்பதை சமீபத்திய திரைப்பட விழா ஒன்றில் தெரிவித்தார் வெற்றிமாறன். தற்போது அமீர்-கார்த்தி-சூர்யா பிரச்சினை ‘பருத்திவீரன்’ தொடர்பாக சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுடன் அமீர் இணைந்து நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், இப்படத்தில் அவர் இருக்கிறார் என்பதை வெற்றிமாறன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமீருடன் அவருடைய கதாபாத்திரம் குறித்து வெற்றிமாறன் விவாதிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அமீருக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் இது என்பதையும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் இணைந்து நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை முன்பு அமீர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement