சூர்யாவின் 'கங்குவா' போர்க் காட்சி 10,000க்கும் மேற்பட்டவர்களை வைத்து படமாக்கப்பட்டது
‘கங்குவா’ திரைப்படத்தில் உள்ள சூர்யா - பாபி தியோல் இடையிலான போர் தொடர்பான காட்சிகள், சுமார் 10,000-க்கும் மேற்பட்டோரை பயன்படுத்தி படமாக்கப்பட்டதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்து வருகிறார்.
உலகளவில் 38 மொழிகளில் ‘கங்குவா’ வெளியாக இருப்பதாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அடுத்தாண்டு மத்தியில் திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், அண்மையில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த பாபி தியோல், ‘உதிரன்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் காரணமாக சூர்யா நடிப்பில் கடந்த வருடம் ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை. சூர்யா நடித்து கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளிவந்தது. இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படத்தின் டீசரை படக்குழு மார்ச் 19ம் தேதி வெளியிட்டது. இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்கள் : “நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பான வழக்கு – தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
இந்நிலையில் ‘கங்குவா’ திரைப்படத்தில் டீசரில் இடம் பெற்றுள்ள சூர்யா - பாபி தியோல் இடையிலான போர் தொடர்பான காட்சிகள், சுமார் 10,000-க்கும் மேற்பட்டோரை பயன்படுத்தி படமாக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.