For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சூர்யா - ஹரி கூட்டணியில் உருவான “வேல்” திரைப்படம் - இன்று ரீரிலீஸ்!

07:17 AM Jul 19, 2024 IST | Web Editor
சூர்யா   ஹரி கூட்டணியில் உருவான “வேல்” திரைப்படம்   இன்று ரீரிலீஸ்
Advertisement

சூர்யா - ஹரி கூட்டணியில் உருவான அதிரடி ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை திரைப்படமான “வேல்” திரைப்படம்  இன்று ரிரிலீஸ்! செய்யப்படுகிறது.

Advertisement

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது  48-வது பிறந்தநாளை  முன்னிட்டு அவரது ரசிகர்கள் ரத்த தானம், உள்ளிட்ட சமூக சேவை உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

நடிகர் சூர்யாவும் ரத்த தானம் செய்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ரத்த தானம் செய்த ரசிகர்களை வீடியோ காலில் சூர்யா வாழ்த்திய இணையத்தில் வைரலானது.  இந்நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த ‘வேல்’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

”வேல்” திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது. ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த இத்திரைப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். இதில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நடிகை அசின் , கலாபவன் மணி , வடிவேலு , நாசர் , சரண்ராஜ் , லட்சுமி , சரண்யா பொன்வண்ணன் மற்றும் அம்பிகா ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இரட்டைக் குழந்தைகளைக் கொண்ட தியாகராஜன் மற்றும் சாரதா தம்பதியினர், மதுரைக்கும் சென்னைக்கும் இடையே பயணம் செய்யும் போது அவர்களில் ஒருவரை இழக்கிறார்கள். தங்கச் சங்கிலிக்காக  திருடப்பட்ட குழந்தை பணக்கார வீட்டின் வாசலில் வைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து குடும்பத்தில் வெற்றிவேல் என்கிற பெயரில் அந்தக் குழந்தை வளர்க்கப்பட்டது.  மற்ற இரட்டையரான வாசு  தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் தொலைக்காட்சி தொகுப்பாளினி சுவாதியை காதலிக்கிறார்.

இந்த ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். தன்னைபோலவே இருக்கும் இவர் யார் என வாசு துப்பறிகிறார். இதனைத் தொடர்ந்து தனது அண்ணன் தான் என்பது தெரியவர அவரை தனது உண்மையான பெற்றோரிடம் திரும்பக் அழைத்து வந்தாரா? அல்லது வேலுவை நேசிக்கும் கிராமத்தில் உள்ள குடும்பத்தினரிடமே விட்டு விட்டு வந்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

Tags :
Advertisement