பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சூரியின் கொட்டுக்காளி!
ஐரோப்பாவின் முன்னோடியான திரைப்படவிழா எனும் பெருமைக்குரிய பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் ‘கொட்டுக்காளி’ படம் திரையிடப்பட்டது.
சூரியின் மூன்று திரைபடங்களுக்கும் சர்வதேச அங்கீகாரம். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூரி. காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறிய ஒருசில நடிகர்களுள் இவரும் ஒருவர். சூரி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில், கதாநாயகனாக தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி கொண்டே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையில் காமெடியனாக வெளிவந்த சூரிக்கு இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்தில் ஹிரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் சூரியின் சினிமாப் பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. விடுதலை பாகம் 1 படத்தில் சூரியின் நடிப்பும் சண்டைக்காட்சிகளை அவர் கையாளும் விதமும் திரையில் பார்க்கும் ரசிகர்களை சிலிர்ப்பூட்டச் செய்தன. பின்னர் தொடர்ந்து இயக்குநர் ராமின் 'ஏழு கடல் ஏழு மலை' வினோத் ராஜின் 'கொட்டுக்காளி' மற்றும் துரை செந்தில் குமாரின் 'கருடன்' என அடுத்தடுத்த திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
நடிகர் சூரியின் 'விடுதலை' மற்றும் 'ஏழு கடல் ஏழு மலை' என இவ்விரண்டு திரைப்படங்களும், 2024 ஆம் ஆண்டுக்கான ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. அதே சமயத்தில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில், சூரி நடித்துள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா 2024 க்கிற்கு தேர்வாகியுள்ளது. இது தொடர்பான செய்திகளும் மற்றும் புகைபடங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் இது குறித்து சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தை பார்த்து கொண்டாடியதில் பெரும் மகிழச்சி; நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர், வினோத்ராஜுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் கொட்டுக்காளி!!
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாடியது பெரும் மகிழச்சி!
நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் தம்பி வினோத்ராஜுக்கும் தம்பி சிவகார்த்திகேயன்க்கும் நன்றி!… pic.twitter.com/qQhEfWwHRh
— Actor Soori (@sooriofficial) February 17, 2024