Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெயிண்டராக இருந்து நடிகராக வளர்ந்ததை நினைவுகூறிய சூரி - ட்விட்டர் தளத்தில் உருக்கம்!

'சுவர்களில் நிறங்களை பதித்தேன் இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்' என்று நடிகர் சூரி சினிமா வாழ்க்கை பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
10:48 AM Feb 12, 2025 IST | Web Editor
Advertisement

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த சின்ன சின்ன கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்தார்.

Advertisement

வெற்றி மாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின்னர், கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் தற்போது, 'ஏழு கடல் ஏழு மலை, மாமன்' படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

சூரி ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அந்த ஹோட்டல் எதிரே புதியதாக கட்டப்பட்டிருக்கும் கட்டிட ஒன்றிற்கு பெயிண்டர் ஒருவர் பெயிண்ட் அடித்து கொண்டிருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்த சூரி, தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இதே வேலை பார்த்து வந்ததை நினைவுகூர்ந்துள்ளார்.

இந்த நிலையில், தனது கடந்த காலத்தை நினைவுகூறும் வகையில் நடிகர் சூரி தனது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சுவர்களில் நிறங்களை பதித்தேன் இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Actor sooripainter
Advertisement
Next Article