For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”வைகோவுக்கு அறுவை சிகிச்சை! அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை!” - துரை வைகோ பதிவு!

04:42 PM May 26, 2024 IST | Web Editor
”வைகோவுக்கு அறுவை சிகிச்சை  அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை ”   துரை வைகோ பதிவு
Advertisement

கால் தடுமாறி விழுந்ததில் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisement

மதிமுக கட்சியின் தலைவர் வைகோ நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக வைகோவின் மகனும், மதிமுக கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்தார்.

இது தொடர்பாக துறை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

"மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று திருநெல்வேலி வருகை தந்தார். எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள் : “தகைசால் தமிழர் விருதை இனி தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும்” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் பெறுவார். வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை"

இவ்வாறு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தனது X தளத்தில் பதிவு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement