ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | விமான நிலையத்தில் சுரேஷ் கிருஷ்ணா என்பவரை பிடித்து போலீசார் விசாரணை…
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவரிடம் விமான நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடி அப்பு குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டாா். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 வழக்குரைஞா்கள் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். இந்தக் கொலை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட நபா்களுக்கு நாட்டு வெடிகுண்டுகளை வழங்கியதாக ரெளடி புதூா் அப்பு, கடந்த செப்.21-ஆம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 28 பேரில், 26 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவரிடம் விமான நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். கொலை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து ஆஜராகத நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையில் விமான நிலையத்தில் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.