பாலியல் வழக்கில் கைதான சூரஜ் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
09:40 PM Jul 03, 2024 IST
|
Web Editor
பாதிக்கப்பட்டவர்கள் ஹோலேநரசிபுரா ஊர்ப்புற காவல் நிலையத்தில் சூரஜ் மீது புகார் அளித்ததையடுத்து, ஜூன் 22-ஆம் தேதி விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கை சிஐடியின் சிறப்பு துறையிடம் அரசு ஒப்படைத்தது. இருவேறு பாலியல் வழக்குகளில் மகன்கள் கைதாகியுள்ள நிலையில் இளைய மகன் சூரஜ் பற்றி அவர்களின் தந்தையும் கட்சி எம்எல்ஏவுமான ஹெச்.டி.ரேவண்ணா பேசியபோது, சூரஜ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் விரைவில் வெளிவருவார். மற்ற விஷயங்கள் குறித்து நான் பேசப்போவதில்லை. எல்லாம் முடியட்டும். விரிவாக விளக்கம் அளிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
Advertisement
பாலியல் வழக்கில் கைதான சூரஜ் ரேவண்ணாவின் நீதிமன்ற காவலை ஜூலை 18 வரை நீட்டித்து பெங்களூரு 42-ஆவது கூடுதல் பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
ஹெச்.டி.தேவகௌடாவின் பேரனும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏவுமான சூரஜ் ரேவண்ணாவின் நீதிமன்ற காவலை ஜூலை 18 வரை நீட்டித்து பெங்களூரு 42வது கூடுதல் பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வலுக்கட்டாயமான இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமைக்கு கட்சி பெண்களை உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சூரஜ் ரேவண்ணாவிடம் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) மற்றும் குற்றவியல் புலனாய்வு துறையினர் (சிஐடி) விசாரணை நடத்திவருகின்றனர்.
Next Article