அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு; உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு!
மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் முடிவடைந்து கடந்த மாதம் 2ம் தேதி மீண்டும் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார்.
இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ கைது செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், தன்னை கைது செய்ததை எதிர்த்தும், நீதிமன்ற காவலில் வைத்திருப்பதை எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : திமுக கூட்டணியின் வெற்றி ரகசியம் என்ன? மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறை மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இரு தரப்புகளின் வாதங்களை விசாரணை செய்து நீதிபதி சஞ்சீவ் கண்ணா நாளை (ஜூலை 12) தீர்ப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.