“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - பாஜகவுக்கு ஓர் எச்சரிக்கை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, பாஜகவுக்கு ஓர் எச்சரிக்கை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில், 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 செல்லாதவை எனக்கூறி தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து, தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டுகளில் திருத்தம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தேர்தல் வெற்றியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், ஆம்ஆத்மியை சேர்ந்த குல்தீப்குமார் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், கடும் கண்டனங்களை தெரிவித்தனர். பாஜக வேட்பாளர் பெற்ற வெற்றி செல்லாது என்றும், ஆம்ஆத்மி வேட்பாளர் குல்தீப்குமார் வெற்றிப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது நீதிக்கும் இம்மண்ணின் சட்டத்துக்குமான ஒளிவிளக்காக அமைந்துள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 142-இன் கீழ் தனக்குள்ள அரிதினும் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், நியாயத்தை நிலைநாட்டியுள்ளதுடன் தேர்தல் அதிகாரியின் தில்லுமுல்லு செயலையும் உறுதியாக நிராகரித்துள்ளது.