மாநில அரசின் சுருக்குமடி வலை தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
தமிழ்நாட்டில் மீன்பிடிக்க சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக் கோரி “பிஷ்ஷர்மேன் கேர்” அமைப்பு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபஸ்-எஸ்-ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மீனவர்கள் அமைப்பு :-
ஏற்கனவே மத்திய அரசு தாக்கல் செய்த ஆய்வு அறிக்கை என்பது மீனவர்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
நீதிபதிகள்:-
இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்கும் போது நாங்கள் எப்படி தலையிட முடியும். வேண்டுமெனில் நாங்கள் ஏற்கனவே சுருக்குமடி வலை தொடர்பான கொள்கை முடிவை பரிசீலனை செய்யுங்கள் என்று மட்டுமே கூற முடியும்.
மேலும் இந்த விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டை எவ்வாறு நாங்கள் முழுவதும் நீக்க உத்தரவிட முடியும். கடல் வளம், சுற்று சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே அரசு முடிவெடுக்கிறது. எனவே பரிசீலனை செய்யுங்கள என மட்டுமே கூற முடியும்.
மனுதாரர்:-
இந்த விவகாரத்தில் மாநில அரசு தடை விதிக்க அதிகாரம் இல்லை.
தமிழ்நாடு அரசு:-
மத்திய அரசு அறிக்கை இருந்தாலும், அதில் மாநில அரசின் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 12 நாட்டிகல் மைல் வரை தமிழக அரசு கட்டுப்பாட்டில் வரும். இந்த சுருக்குமடி வலையால் கடல் வளம் அழிக்கப்படுகிறது. சிறிய மீனவர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். எனவே தான் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் தமிழகம் மட்டுமல்ல மாகாராஷ்டிராவிலும் தடை உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இதனைக்கேட்ட நீதிபதிகள், சுருக்குமடி வலை தொடர்பான மகாராஷ்டிரா வழக்கும் இந்த வழக்குடன் இணைத்து விசாரிக்கப்படும் எனக்கூறி இறுதி விசாரணைக்காக (Final hearing) ஏப்ரல் 24ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.