திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!
 
                        திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
                
 
        
                01:09 PM Jun 04, 2025 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
            
    
    
         
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கும்பாபிஷேகத்தை நடத்த கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை
முடிவு செய்துள்ளது.
                 Advertisement 
                
 
            
        இந்த நிலையில், கும்பாபிஷேக நேரத்தை நண்பகல் முகூர்த்தமான 12:05 மணி முதல் 12:45 மணி வரை மாற்ற வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சிவராம சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றதில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு விசாரித்தது. சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில் அந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 Next Article   
         
 
            