For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

02:31 PM Mar 19, 2024 IST | Web Editor
பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
Advertisement
பதஞ்சலி விளம்பரத்தில் தவறான தகவல்கள் வெளியிடுவதாக தொடரப்பட்ட வழக்கில் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி,  சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.  கடந்த மாதம் 'பதஞ்சலி' நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த உச்ச நீதிமன்றம் பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோலி,  அஹ்ஸானுத்தீன் அமானுல்லாஹ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்காததை கண்டித்த நீதிபதிகள்,  அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையின் போது பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement