பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
12:43 PM Jul 15, 2024 IST
|
Web Editor
அப்போது சிபிசிஐடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி, “சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தான் சம்மன் அனுப்ப முடியுமா? 4 கோடி ரூபாய் வழக்கில் சம்பந்தப்பட்ட "ஹார்ட் டிஸ்க்" காணாமல் போய் உள்ளது. அதுகுறித்து விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
Advertisement
மக்களவை தேர்தலின் போது ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Advertisement
நாடாளுமன்ற தேர்தலின் போது ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அனுமதியின்றி கேசவ விநாயத்தை விசாரணைக்கு அழைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிசிஐடி மேல்முறையீடு செய்த வழக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து கேசவ விநாயகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Article