For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

100% ஒப்புகைச் சீட்டு வழக்கு | கடந்து வந்த பாதை...

12:30 PM Apr 26, 2024 IST | Web Editor
100  ஒப்புகைச் சீட்டு வழக்கு   கடந்து வந்த பாதை
Advertisement

100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்... 

Advertisement

வாக்காளர்கள் தங்களது வாக்கினை யாருக்கு செலுத்தினார்கள் என்பதை உறுதிபடுத்த மின்னணு வாக்கு இயந்திரத்துடன் விவிபேட் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.  ஒருவர் வாக்கை செலுத்தியதும் 7 விநாடிகளுக்கு விவிபேட் ஒப்புகை சீட்டில் வாக்காளர் பதிவான தங்கள் வாக்கை சரி பார்க்க முடியும்.  மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்கு இயந்திரத்தில் எண்ணப்பட்டு விட்டதா?  என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் வாக்காளர் சரிபார்த்து உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான சங்கம் மனுத்தாக்கல் செய்தது.

அதேபோல், தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100% ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமென சமூக ஆர்வலர் அருண் குமார் அகர்வால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகள் மீதான விசாரணையின் போது, “2019-ம் ஆண்டு தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் உள்ள தரவுகளை மாநிலம் வாரியாக பகுப்பாய்வு செய்து பார்த்தபோது, சுமார் 373 தொகுதிகளில் முரண்பாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. காஞ்சிபுரம், மதுரை, தருமபுரி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுடன், எண்ணிப்பட்ட வாக்குகளுடன் பொருந்தி வரவில்லை” என முக்கியத்துவம் வாய்ந்த வாதங்களை மனுதாரர் தரப்பு முன்வைத்தது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் விவிபேடு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 18-ம் தேதியன்று உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது. 

பின்னர்,  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர்.  இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது.  ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன?

கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?.  மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?.  கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார்.  இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அ ப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.  இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில்,  “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்,  விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன.  அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும்.  46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும்.  அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை.  அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.  இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பின் போது, மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.  மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட்,  விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றிலும் நிறைய சந்தேகங்களை எழுப்பி நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இ வற்றுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள தொழில்நுட்பரீதியான,  அறிவியல்ரீதியான ஆதாரங்களையும், வாதங்களையும் நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.

எனவே,  மனுதாரர்கள் தரப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்,  கன்ட்ரோல் யூனிட், விவிபாட் இயந்திரம் குறித்து வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகின்றன.  ஆனாலும், இந்த இயந்திரங்களின் நம்பகத் தன்மையை மேலும் அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் தேவையான முடிவுகளை எடுக்கலாம்.

பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது . தற்போதைய நடைமுறையே சரியாக தான் உள்ளது. எ னவே, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று நீதிபதிகள் கூறினர்.  உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரத்தின் செயல்பாடுகளை,  நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Tags :
Advertisement