For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என கூறிய நீதிபதி | #SupremeCourt கண்டனம்!

02:24 PM Sep 20, 2024 IST | Web Editor
இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என கூறிய நீதிபதி    supremecourt கண்டனம்
Advertisement

பெங்களூருவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி வாடகை கட்டுப்பாட்டுச் சட்டம் தொடர்பான வழக்கு ஒன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை நீதிபதி வேதவியாச ஸ்ரீஷானந்தா விசாரித்தார். இதில் குத்தகை ஒப்பந்தம் மற்றும் நில உரிமையாளர்களின் அதிகாரங்கள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார். இதில், வாடகைக் கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களில் தேவைப்படும் சில திருத்தங்கள் தொடர்பாகவும் விவாதம் நடைபெற்றது.

இந்த விசாரணையின் போதுதான், பெங்களூருவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என்று அவர் குறிப்பிட்டார். அவர் பாகிஸ்தான் என குறிப்பிட்ட அந்த பகுதி பெங்களூரு நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோரி பல்யா எனும் பகுதியாகும். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி பெண் வழக்கறிஞரிடமும் சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்த வீடியோ க்ளிப்பும் வெளியானது.

இதையும் படியுங்கள் ; #Nandhan - சாதிய இழிவு தீண்டாமை குப்பைகளை எரிக்கும் புரட்சி தீக்குச்சி! சீமான் புகழாரம்!

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இது தொர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது. 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags :
Advertisement