Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பீகார் இடஒதுக்கீடு வரம்பு உயர்வை ரத்து செய்தது செல்லும்! உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!!

12:32 PM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்திலிருந்து 65% ஆக உயர்த்தும் பீகார் அரசின் உத்தரவை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு இடைகால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

பீகார் மாநிலத்தில் அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

பீகார் அரசு கொண்டு வந்த இடஒதுக்கீடு வரம்பு உயர்வு அரசாணையில் இதர பிரிவினருக்கான இடஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்பட்டதுடன் சேர்த்து பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டையும் சேர்த்து அந்த மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீடு வரம்பு 75 சதவீதமாக மாறி இருந்தது.  பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்படுவதாக பிகார் அரசு கூறியிருந்தது.

ஆனால் உச்சநீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் வழங்கிய தீர்ப்பின் படி இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்ற தீர்ப்பை இதன் மூலமாக மீறப்பட்டிருக்கிறது என்று இதற்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், இடஒதுக்கீட்டு வரம்பை உயர்த்திய பீகார் அரசின் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.

அந்த உத்தரவை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் பீகார் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இன்று இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags :
BiharBihar ReservationPatna High CourtSupreme court
Advertisement
Next Article