Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலக்குகளை துல்லியமாக தாக்கும் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை - சோதனை வெற்றி!

05:29 PM Jan 26, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (பிஏபிஎல்) ஆகியவை இணைந்து தயாரித்த இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 

Advertisement

இந்திய கடற்படை உள்நாட்டிலேயே தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பரிசோதனை ஜன.24-ம் தேதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.  இந்திய கடற்படை பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சோதனையை நடத்தியது.

இந்த ஏவுகணை கடலில் ஏற்படும் எந்தப் போர்ச் சூழலையும் சமாளிக்கும் வகையில் இந்தியக் கடற்படையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.  கடற்படை கப்பலில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை, நிலத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  “மயில் போல பொண்ணு ஒன்னு….” – திரைத்துறையில் பவதாரிணி கடந்து வந்த பாதை..!

இதுதொடர்பாக இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

"இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (பிஏபிஎல்) ஆகியவை இணைந்து தயாரித்த, இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பரிசோதனை  வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஏவுகணை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கப்பல்களில் இருந்து இந்த சோதனையானது நடத்தப்பட்டது."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Indiaindian navynews7 tamilNews7 Tamil UpdatesSupersonic Missiletest
Advertisement
Next Article