சூப்பர் 8 சுற்று! : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி!
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 இன்றைய சுற்றில் இங்கிலாந்து அணிக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
அதன்படி, இன்று வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
இதையும் படியுங்கள் : தொடர் கனமழை : வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
பிரண்டன் கிங் காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த மொயின் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 26 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.