For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சூப்பர் 8 சுற்று : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

06:57 AM Jun 25, 2024 IST | Web Editor
சூப்பர் 8 சுற்று    ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
Advertisement

சூப்பர் 8 பிரிவில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு மூன்றாவது அணியாக இந்திய அணி நுழைந்துள்ளது. 

Advertisement

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இதுவரை குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. குரூப் I-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. வெஸ்ட் இண்டீசில் உள்ள பியூஸ்ஜோர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 51வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 92 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜோஷ் ஹேசல்வுட் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 6 ரன்களுடன் ஆட்டமிழந்தார். கேப்டன் மிட்செல் மார்ஷ் 37 ரன்கள், மேக்ஸ்வெல் 20 ரன்கள், ஸ்டாய்னிஸ் 2 ரன்களுடன் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட்43 பந்துகளில் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். டிம் டேவிட் 15 ரன்கள், வேட் 1 ரன்னுடன் வெளியேறினார்கள்.

இதையும் படியுங்கள் : 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 2.5 கோடி சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளது – மல்லிகர்ஜுன கார்கே குற்றச்சாட்டு

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலியா அணி எடுத்தது.  அா்ஷ்தீப் சிங் 3 மற்றும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். சூப்பா் 8 இல் மூன்று ஆட்டங்களிலும் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி. ஆனால் ஆப்கன்-வங்கதேச ஆட்டத்தின் முடிவையொட்டி தான் ஆஸ்திரேலியா அணியின் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.

Tags :
Advertisement