For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சூப்பர் 8 சுற்று - இங்கிலாந்தை வீழ்த்தி தென்ஆப்பிரிக்க அணி வெற்றி!

07:33 AM Jun 22, 2024 IST | Web Editor
சூப்பர் 8 சுற்று   இங்கிலாந்தை வீழ்த்தி தென்ஆப்பிரிக்க அணி வெற்றி
Advertisement

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 

Advertisement

ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது.  20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.  இந்த நிலையில் செயின்ட் லூசியாவில் நேற்று நடந்த சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி,  தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக்கும்,  ரீஜா ஹென்ரிக்சும் களமிறங்கினர்.  குயின்டான் டி காக் 65 ரன்களிலும், ஹென்ரிக்ஸ் 19 ரன்களிலும் வெளியேறினர்.  அடுத்து வந்த கிளாசென் 8 ரன்னிலும், கேப்டன் மார்க்ரம் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.  இவர்களை அடுத்து ஆடிய டேவிட் மில்லர் 43 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.  இங்கிலாந்து அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும்,  அடில் ரஷித்,  மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.  தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் பில் சால்ட் 11 ரன்னிலும், கேப்டன் ஜோஸ் பட்லர் 17 ரன்னிலும் வெளியேறினர்.

தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.  இதன் பின்னர் ஹாரி புரூக் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்து நிலைத்து ஆடினர்.  அதில் லிவிங்ஸ்டன் 33 ரன்னில் அவுட் ஆனார்.  ஹாரி புரூக் 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.  20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.  தென்ஆப்பிரிக்கா 2வது வெற்றியுடன் அரைஇறுதி வாய்ப்பையும் நெருங்கியது.

Tags :
Advertisement