Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கொளுத்தத் தொடங்கியது கோடை வெயில்! - தமிழ்நாட்டில் ஒரே நாளில் எகிறிய மின்நுகர்வு! - எவ்வளவு மெகாவாட் தெரியுமா?

01:58 PM Mar 23, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்சமாக 19,409 மெகாவாட் மின் நுகர்வு இருந்தாக மின்துறை அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் கோடை காலம் தொடங்குகிறது. ஆனால்,தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் நீர் நிலைகளிலும் நீரின் அளவு குறைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் அருவிகளும் வறண்டே காணப்படுகின்றன.மேலும்,  பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த காணப்படுகிறது. இதனால், மின்சாரத்தின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்கள் : IPL 2024: இன்று நடைபெற உள்ள இரண்டு போட்டிகள்!

இதற்கிடையே, தமிழ்நாட்டில் நேற்று (மார்ச் - 22)  வெயில் தாக்கம் சராசரி நிலையை தாண்டி அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக, மின்சாரத்தின் பயன்பாடு  உச்சபட்சமாக 19,409 மெகாவாட் மின் நுகர்வு இருந்தாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று மின் நுகர்வு 19,409 மெகாவாட் மின் நுகர்வு இருந்த போதிலும், தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதாக மின்துறை தகவல் அளித்துள்ளது.

இதற்குமுன் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அன்று 19,387 மெகாவாட் மின் நுகர்வே ஒருநாளின் அதிகபட்ச மின் நுகர்வாக இருந்தது. தமிழ்நாட்டில்  கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே மின்சர உபயோகம் 19,409 மெகாவாட்டாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ElectricityEnergy consumptionHeatmegawattssummertamil nadu
Advertisement
Next Article