For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொப்பையை குறைக்க உதவும் கோடை பழங்கள்!

02:42 PM May 05, 2024 IST | Web Editor
தொப்பையை குறைக்க உதவும் கோடை பழங்கள்
Advertisement

தொப்பையை குறைக்க உதவும் கோடை கால பழங்கள் பற்றி பார்க்கலாம்.

Advertisement

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.

கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது.   அதன்படி, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இந்த பல பழங்கள் நமக்கு கிடைக்கின்றன.  அந்த வகையில்,  தொப்பையை குறைக்க உதவும் கோடை கால பழங்கள் பற்றி பார்க்கலாம்.

ஆப்பிள்

ஆப்பிள்கள் எடையை குறைப்பதற்கு சிறந்த பழமாகும்.   இதில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளது.

அவகோடா

அவகோடா பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது.  இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.

கிவி

கிவி பழத்தை செரிமானம் செய்ய நமது உடல் அதிக கலோரிகளை எரிக்கிறது.  இது கொழுப்பை கறைக்க உதவுகிறது.

பெர்ரி

பெர்ரி அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கிறது.  இதனால் அளவுக்கு அதிகமாக உண்பது தடுக்கப் படுகிறது.

பேரிக்காய்

பேரிக்காயில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது.  இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டையும் வழங்குகிறது.

பப்பாளி

பப்பாளி செரிமானத்தை மேம்படுத்துகிறது.  இது எடை இழப்புக்கு உதவுகிறது.

கொய்யா பழம்

கொய்யாவில் அத்தியாவசிய வைட்டமின்கள் நிரம்பியுள்ளன.  இது எடை இழப்புக்கான உதவுகிறது.

Tags :
Advertisement