ஓசூரில் திடீர் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் கடும் அவதி!
10:44 AM Feb 05, 2024 IST
|
Web Editor
காலையில் லேசான குளிர் காணப்பட்ட நிலையில், திடீரென்று காலை 8 மணியளவில்
பனிப்பொழிவில் தாக்கம் அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எறியவிட்டவாறு சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டி சென்றனர். குறிப்பாக, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பெங்களூர் - தர்மபுரி நெடுஞ்சாலை ஆகிய பிரதான நெடுஞ்சாலைகளில் வெண்போர்வை போர்த்தியது போல கடுமையான மூடுபனி
பொழிந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கடும் பனிப்பொழிவால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
Advertisement
ஓசூரின் சுற்றுவட்டார பகுதிகளில் பொழிந்த திடீர் பனிப்பொழிவால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதிக்குள்ளாகினர்.
Advertisement
ஓசூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பனிப்பொழிவின் தாக்கம் குறைந்திருந்தது.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு மேலாக திடீரென்று பனிப்பொழிவின் அளவு அதிகரித்து காணப்பட்டது. இதனால் அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவிற்க்கு பனி அதிகமாக பொழிந்ததால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
பனிப்பொழிவில் தாக்கம் அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எறியவிட்டவாறு சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டி சென்றனர். குறிப்பாக, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பெங்களூர் - தர்மபுரி நெடுஞ்சாலை ஆகிய பிரதான நெடுஞ்சாலைகளில் வெண்போர்வை போர்த்தியது போல கடுமையான மூடுபனி
பொழிந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Next Article