ஓசூரில் திடீர் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் கடும் அவதி!
ஓசூரின் சுற்றுவட்டார பகுதிகளில் பொழிந்த திடீர் பனிப்பொழிவால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதிக்குள்ளாகினர்.
ஓசூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பனிப்பொழிவின் தாக்கம் குறைந்திருந்தது.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு மேலாக திடீரென்று பனிப்பொழிவின் அளவு அதிகரித்து காணப்பட்டது. இதனால் அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவிற்க்கு பனி அதிகமாக பொழிந்ததால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
காலையில் லேசான குளிர் காணப்பட்ட நிலையில், திடீரென்று காலை 8 மணியளவில்
பனிப்பொழிவில் தாக்கம் அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எறியவிட்டவாறு சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டி சென்றனர். குறிப்பாக, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பெங்களூர் - தர்மபுரி நெடுஞ்சாலை ஆகிய பிரதான நெடுஞ்சாலைகளில் வெண்போர்வை போர்த்தியது போல கடுமையான மூடுபனி
பொழிந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் கடும் பனிப்பொழிவால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.