”தமிழ் நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் மதிக்கக் கூடியவர் சுதர்சன் ரெட்டி” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்தியா கூட்டணி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் , திமுக எம்.பி கனிமொழி தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்தில் துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவை திரட்டினார். அப்போது பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,
”அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க நினைக்கும் பாஜகவுக்கு எதிராக அரசமைப்பு சட்டத்தை பாதுகாத்தவர் தான் நிற்க வேண்டும். சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் மதிக்கக் கூடியவர். புதிய தேசிய கல்விக் கொள்கை மனித மாண்பிற்கு எதிரானது, பன்முகத்தையும் ஜனநாயகத்தையும் அது உருவாக்காது என பேசியவர் சுதர்சன் ரெட்டி என்றார் . மேலும் அவர்,”உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் பொறுப்பை மறந்து ஒரு நீதி அரசரையே நக்சல் என்று விமர்சனம் செய்கிறார்”
என்று கூறினார்.