For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சூடான் : மசூதி மீது துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் உயிரிழப்பு!

சூடானில் மசூதி மீது துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
07:31 AM Sep 20, 2025 IST | Web Editor
சூடானில் மசூதி மீது துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடான்   மசூதி மீது துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் உயிரிழப்பு
Advertisement

சூடானில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவத்துக்கும், ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரப்போட்டி தொடங்கியது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகின்றது.

Advertisement

இந்த நிலையில் ஆர்எஸ்எப் எனப்படும் துணை ராணுவமானது வடக்கு டார்பூரின் தலைநகரான எல்பாஷர் நகரில் உள்ள மசூதி மீது நேற்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே அதிகாலை டிரோன் மூலமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வயதானவர்கள், குழந்தைகள் உட்பட மசூதியில் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Tags :
Advertisement