For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாரடைப்பிற்கு பின் கோமா - உயிருக்கு போராடும் எமிலி வில்லிஸ்!

04:57 PM Mar 11, 2024 IST | Web Editor
மாரடைப்பிற்கு பின் கோமா   உயிருக்கு போராடும் எமிலி வில்லிஸ்
Advertisement

அமெரிக்க Adult திரைப்படத் துறையில் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில், நடிகை எமிலி வில்லிஸ் உயிருக்கு போராடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அமெரிக்காவில் Adult படங்களில் நடித்து வந்த நடிகர்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர் கதையாகியுள்ளது.  கடந்த 3 மாதங்களில் 4வது நபராக நடிகை சோபியா லியோ மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.  தற்போது மற்றொரு நடிகை மாரடைப்பு ஏற்பட்டு மரணப்படுக்கையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

தென்அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் நடிகை எமிலி வில்லிஸ். இவர் தொடக்கத்தில் மாடல் நடிகையாக இருந்தவர்.  அதன் பின் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் Adult திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.  அந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான இரண்டு Adult திரைப்படங்களுக்கும் கிடைத்த வரவேற்பு காரணமாக தொடர்ந்து 700 திரைப்படங்கள் நடித்தார்.  இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு பின்னர் Adult திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில், திடீர் மாரடைப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 5 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் கோமா நிலையில் கலிபோர்னியாவில் இருக்கும் தவுசண்ட் ஓக்ஸ் நகரின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாரடைப்புக்கு சிகிச்சை பெற்ற நடிகை தற்போது கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து, Adult திரைப்பட நடிகர்கள் உயிரிழந்து வரும் நிலையில்,  தற்போது 25 வயதான நடிகை எமிலி வில்லிஸ் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடி வருவது,  அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement