Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புறநகர் ரயில்கள் ரத்து - கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!

11:44 AM Feb 18, 2024 IST | Web Editor
Advertisement

தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

Advertisement

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இன்று பராமரிப்புப் பணிகள் காரணமாக புறநகர் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தாம்பரம் - கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

கோடம்பாக்கம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே தெற்கு ரயில்வே சார்பில் இன்று (பிப்.18) பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக காலை 10 முதல் பிற்பகல் 3.15 மணி வரை தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்ட்ரல், கடற்கரைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும்.

முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Additional BusesChennaiMTCSuburban TraninsTransport
Advertisement
Next Article