மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் சு. வெங்கடேசன் செயல்பட்டு வருகிறார். இவரின் தந்தை ரா. சுப்புராம் (79). இவர் (சுப்புராம்) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், சுப்புராம் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மதுரை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 6 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
இதையும் படியுங்கள் : “2026-ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டியே” -தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேச்சு
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் தந்தையின் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் தந்தையாரான ரா.சுப்புராம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் சு.வெங்கடேசனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.