Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தடுமாறிய மும்பை இந்தியன்ஸ் - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

06:55 AM Apr 02, 2024 IST | Jeni
Advertisement

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ரோஹித் ஷர்மா, நமன் திர், டவால்ட் பிரீவிஸ் என மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இஷான் கிஷன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திலக் வர்மா 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 34 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.

இதையும் படியுங்கள் : “கச்சத்தீவை இலங்கைக்கே சொந்தமென்று அறிவித்தார்கள்! பதைத்தோம் – துடித்தோம்!” – வைரல் ஆகும் மு.கருணாநிதியின் கருத்து!

இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களும், ஜாஸ் பட்லர் 13 ரன்களும் எடுத்து வெளியேறினர். சஞ்சு சாம்சன் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரியான் பராக் பொறுப்புடன் விளையாடி, 39 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். மற்றொரு புறம் ரவிச்சந்திரன் அஷ்வின் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். 15.3 ஓவர்களில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags :
hardikpandyaIPL2024MIvRRMIvsRRMumbaiIndiansrajasthanroyalsRiyanParagrohitsharmaRRvMIRRvsMISanjuSamson
Advertisement
Next Article