கனமழை பெய்தும் விடுமுறை இல்லை | புதுச்சேரியில் மழையில் நனைந்த படியே பள்ளி சென்ற மாணவர்கள்!
புதுச்சேரியில் இன்று (நவ.30) காலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில்,
பள்ளிகளுக்கு விடுமுறை விடாததால் மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே
பள்ளிக்குச் சென்றனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரியின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றே அடை மழை காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புதுச்சேரியில் நேற்று பகல் முழுவதும் பெய்த மழை இரவில் விட்டதால், மழை இல்லையென, புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் பரவலாக நகரப் பகுதி மட்டும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படாததால், மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றனர்.
மேலும் இந்த மழை காரணமாக வேலைக்கு செல்வோர், சிறு வியாபாரிகள் உழவர் சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.