For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி எடுக்க அறுவுறுத்த வேண்டும் - பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம்!

09:41 PM Jan 03, 2024 IST | Web Editor
போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி எடுக்க அறுவுறுத்த வேண்டும்   பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம்
Advertisement

மாணவர்களை போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுக்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம் எழுதியுள்ளது. 

Advertisement

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.  அந்த கடிதத்தில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக தங்கள் மாணவர்களை உறுதிமொழி எடுக்க அறுவுறுத்த வேண்டும் என கூறியது.

இந்த உத்தரவு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் 'நாஷா முக்த் பாரத் அபியான்' திட்டத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப உள்ளது.  இது  கல்லூரி வளாகங்களுக்குள் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுப்பதில் கவனம் செலுத்துகிறது.

"HEI-க்கள், NSS தன்னார்வ தொண்டர்கள், மாணவர் சங்கங்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்வதை தொடர்ந்து கல்லூரி வளாகங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கலாம்" என்று UGC செயலாளர் மணீஷ் ஜோஷி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ‘இந்தியா’ கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு?

ராகிங் தடுப்பு, போதைப்பொருள் இல்லாத சூழலை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் பொதுவான அமைப்புகளை நிறுவுமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியது.

போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகளை புரிந்து கொண்டு, மாணவர்களின் உறுதிமொழியில், “மது, புகையிலை போன்ற போதைப்பொருட்களை வைத்திருப்பது, பயன்படுத்துவது, விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பது தவறானது மற்றும் தீங்கு விளைவிக்கும் என்பதையும் நான் அறிவேன். நான் இந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதையோ, வைத்திருப்பதையோ, விநியோகிப்பதையோ தவிர்ப்பேன்.

கவனிக்கப்பட்ட முறைகேடுகள் குறித்து நிறுவன அதிகாரிகளிடம் புகார் அளிப்பேன். நான் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பேன் மற்றும் எனது நிறுவனத்தில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் இருப்பதைத் தடுப்பேன்" என்று அந்த உறுதிமொழியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement