Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நான் முதல்வன் திட்டத்தின் வேலைவாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” - அமைச்சர் உதயநிதி

03:46 PM Feb 16, 2024 IST | Web Editor
Advertisement

நான் முதல்வன் திட்டத்தின் வேலைவாய்ப்புகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

Advertisement

சென்னை நந்தனம் மெட்ரோ அலுவலகத்தில் 8 வது தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  பின், நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்கள் 700பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.  மேலும் ஸ்கௌட் திட்டம் தொடர்பாக பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும்,  டெக் மகேந்திரா மற்றும் Oracle adroit நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்நிகழ்வில் கையெழுத்தானது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

“இன்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்காக 8 கோடியே 78 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.  இந்த கட்டடம் 7 ஸ்டார்
ஹோட்டல் போல்,  பணியாளர்களுக்கு ஏற்றவாறு எல்லா வசதிகளுடன் செய்து
தரப்பட்டுள்ளது.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் பேசும் பொழுது 33 மாதம்
கால திமுக ஆட்சியில் 10 திட்டங்களை முதலமைச்சர் கூறினார்.

அதில் திறன் மேம்பாடும் ஒன்று.  தமிழ்நாடு மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் மேம்பாட்டு கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  அதிலும் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள்,  இளம் பெண்கள் திறன் பயிற்சி வழங்கிய அவர்களுக்கான வேலை வாய்ப்பு பெற்று தருவதில் திறன் மேம்பாட்டு கழகம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திறன் பயன்பாடு என்று நான் முதல்வர் திட்டம் இன்று பறந்து விரிந்து செயல்பட்டு
வருகிறது. இதன் மூலம் 2022ஆம் ஆண்டு 13 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள். அடுத்த 2023 ஆண்டில் 14, 80,000 பேர் நான் முதல்வன் திட்ட மூலம் பயனடைந்துள்ளனர். சர்வதேச திறன் போட்டியில் உலக அளவில், கலந்து கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போட்டியாளர்கள் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளனர்.  அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று கடந்த ஆண்டு ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியில் இணைந்துள்ளனர்.  இந்த வாய்ப்பை
இந்தாண்டும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறேன்.  நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு 2 வருடத்தில் 25
லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.  நம் அரசின் பிராண்ட் அம்பாசிடர்ஸ், அரசின் தூதுவர்கள் நீங்கள் தான்” என கூறினார்.

Tags :
Naan MudhalvanTamilnadu Skill Development CorporationUdhayanithi Stalin
Advertisement
Next Article