பொங்கல் விழாவை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய கோவை கல்லூரி மாணவ, மாணவிகள்!
கோவை சங்கரா அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் முளைப்பாரி எடுத்து மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் மாணவர்களால் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து பேராசிரியர்களுடன் இணைந்து பொங்கல் விழாவைக் கொண்டாடினர். கல்லூரி வாசலிலிருந்து முளைப்பாரி எடுத்து மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடி வந்து கோலம் போட்டு பொங்கல் வைத்தனர்.
இதையும் படியுங்கள் : மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்கிறார்.!
மேலும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மேலும் பறை இசைத்து கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவர்கள் குழுவாக நடனமாடினார்.
விழாவில் கல்லூரியில் படிக்கும் கேரளாவை சேர்ந்த மாணவ, மாணவர்களும் தமிழ் பாரம்பரிய முறையில் சேலை மற்றும் வேட்டியணிந்து, ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக கேரளா மாநிலத்தை சேர்ந்த மாணவ ,மாணவர்கள் தெரிவித்தனர்.