Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்த திடீர் வெள்ளத்தால் 3 மாணவர்கள் உயிரிழப்பு - சக மாணவர்கள் போராட்டம்!

10:20 AM Jul 28, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லியின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் வெள்ள நீர் புகுந்ததில் 3பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்டித்து சக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில்  ரவு [RAU] ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.

இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், துரதிஷ்டவசமாக 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : கேரளாவில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது – ராயன் படத்தை ரகசியமாக பதிவு செய்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்!

இதனைக் கண்டித்து நேற்று நள்ளிரவு முதல் பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன்னால் மாணவர்கள் ஒன்றுகூடி டெல்லி மாநகராட்சியைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்பை அப்புறப்படுத்தாலேயே கட்டடத்துக்குள் நீர் புகுந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags :
coaching centreDeadDelhiFloodingrau IAS study centrestudents
Advertisement
Next Article