For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கல்லூரி மாணவர் வங்கி கணக்கிலிருந்து ரூ.46 கோடி பணம் பரிவர்த்தனை! - எங்கு நடந்தது தெரியுமா?

01:47 PM Mar 30, 2024 IST | Web Editor
கல்லூரி மாணவர் வங்கி கணக்கிலிருந்து ரூ 46 கோடி பணம் பரிவர்த்தனை    எங்கு நடந்தது தெரியுமா
Advertisement

கல்லூரி மாணவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.46 கோடி பணம் பரிவர்த்தனை நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரமோத் குமார் தண்டோடியா (25).  இவருடைய பான் எண் மூலம் மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.46 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்று பிரமோத் குமாருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

இதையும் படியுங்கள் : மதுபான கொள்கை ஊழல் விவகாரம் - அமலாக்கத்துறையின் அதிரடி மூவ்...டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சம்மன்!

இதனால்,  அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக வருமான வரித்துறை அலுவலர்களிடம் விசாரித்துள்ளார்.  அதன் பின் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  அப்போது,  பிரமோத் குமாரின் பான் எண்,  அந்த நிறுவனத்தின் பான் எண்ணாக சேர்க்கப்பட்டு பணப் பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர்,  இந்த சம்பவம் குறித்து பிரமோத் குமார் போலீசாரிடம் புகார் அளிக்க முயன்றார். ஆனால்,  அவரது புகாரை ஏற்காமல் உள்ளூர் காவல் துறையினர் மறுத்ததாக  அவர் தகவல் தெரிவித்தார் . இதனால், நேற்று ( 29.03.2024) குவாலியர் கூடுதல் காவல்துறை (ஏஎஸ்பி) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  அந்த நபர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.  தனிநபரின் பான் எண் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement