Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்!

12:34 PM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement
3 குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி),  குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்),  பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்நிலையில்,  3 குற்றவியல் சட்டங்களை இன்று முதல் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகம் முன்பு உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் திருத்த சட்டங்களை திரும்ப பெறக் கோரி, மணப்பாறை வழக்கறிஞர்கள் உண்ணாதம் இருந்தனர்.

அதேபோல் புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல் படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதே போல் திண்டுக்கல், கும்பகோணம் பகுதிகளிலும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags :
Bharatiya Nagarik SanhitaBharatiya Nyaya SanhitaBharatiya Sakshya AdhiniyamBNSBNSSBSACriminal Procedure CodeIndian Penal CodeProtest
Advertisement
Next Article