ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு..!
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் நேற்று 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கடற்கரை பகுதியில் சுனாமி அலைகள் எழுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஹோன்ஷூ அருகே 13 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர பகுதிகளில் 5 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்தன. பாதுகாப்பு கருதி 33,500 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டன. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படியுங்கள் : இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு..!
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததாகவும், அதில் இருந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாகவும், அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.