For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தனியார் பள்ளியில் 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்!

04:50 PM Dec 17, 2024 IST | Web Editor
தனியார் பள்ளியில் 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்
Advertisement

ராமநாதபுரத்தில் பள்ளியில் கழிவறைக்கு சென்ற 4 வயது சிறுமியை, தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சரஸ்வதி நகரில், யாதவா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் எல்.கே.ஜி படித்து வரும் 4 வயது சிறுமி ஜெய்ஸ்வினி, இன்று வகுப்பறையில் இருந்து கழிப்பறை சென்றுள்ளார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் கூட்டமாக வந்த தெரு நாய்கள், மாணவி ஜெய்ஸ்வினியை
துரத்தியுள்ளது.

தொடர்ந்து பயந்து ஓடிய மாணவியை நாய் ஒன்று கடித்து, முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளது. மாணவியின் அழுகை சத்தத்தை கேட்ட அருகில் இருந்த பணியாளர்கள், நாயை துரத்தி சிறுமியை மீட்டனர். முகத்தில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஜெய்ஸ்வினியை, பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின் தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் சிறுமியை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட பொழுது, முறையாக பதிலளிக்காமல் நேரம் சரி இல்லை என தெனாவட்டாக பதில் கூறியுள்ளனர். இச்சம்பவம் பரமக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement