For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புயல் பாதிப்பால் கல்விச் சான்றிதழ்களை இழந்தோருக்கு குட் நியூஸ்!

09:02 AM Dec 11, 2023 IST | Web Editor
புயல் பாதிப்பால் கல்விச் சான்றிதழ்களை இழந்தோருக்கு குட் நியூஸ்
Advertisement

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் கட்டணமின்றி பெறும் வகையில்,  சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.  

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இதையும் படியுங்கள்:  புதுச்சேரியில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று!

இந்த நிலையில் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையில் சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.   இந்த முகாம்கள் மூலம் ஆதார் அட்டை குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை பெறலாம்.

இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு கட்டணமின்றி சான்றிதழ்களை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.  இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் டிச.12-ம் தேதி (செவ்வாய்க் கிழமை)  முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.   இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

Tags :
Advertisement