#StopHarassment: பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகைக்கும் பாலியல் மிரட்டல்!
மேற்கு வங்கத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகைக்கும் பாலியல் மிரட்டல் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மருத்துவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட திரையுலகினரும் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான மிமி சக்ரபர்த்தியும், போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நடிகை மிமி, தனக்கும் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்தும், சமீபகாலமாக மிமி, தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
AND WE ARE DEMANDING JUSTICE FOR WOMEN RIGHT????
These are just few of them.
Where rape threats has been normalised by venomous men masking themselves in the crowd saying they stand by women.What upbringing nd education permits this????@DCCyberKP pic.twitter.com/lsU1dUOuIs— Mimi chakraborty (@mimichakraborty) August 20, 2024
இதனைத் தொடர்ந்து, மிமியின் பதிவுக்கு, பாலியல் ரீதியாகவும், மிரட்டல் விடுக்கும் விதமாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மிமி, தனது எக்ஸ் பக்கத்தில் ”நாங்கள் பெண்களின் உரிமைக்காக நீதி கோருகிறோம்? விஷத்தன்மை வாய்ந்த சில ஆண்கள் தங்களின் உண்மை முகத்தை மறைத்துக் கொண்டு, பெண்களுக்கான பாலியல் போராட்டங்களில், பெண்களுக்கு ஆதரவாக நிற்பது போல நடிக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.