"தருமபுரி மாவட்டத்தின் மீது வன்மத்தைக் கைவிடுங்கள்" - அன்புமணி ராமதாஸ்!
தருமபுரி மாவட்டத்தில் அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தந்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தருமபுரி மாவட்டம் மீதான புறக்கணிப்பைக் கைவிட்டு, காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியின் ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் தோல்வியடைந்ததால், பழிவாங்கும் நோக்கில் தருமபுரி மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். "எனக்கு வாக்களித்தவர்கள் வருந்தாத அளவிற்கும், வாக்களிக்காதவர்கள் தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தும் அளவிற்கும் எனது பணி இருக்கும்" என்ற முதலமைச்சரின் பேச்சு வெறும் வசனமாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில், தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அவசியமான பல திட்டங்களை திமுக அரசு வேண்டுமென்றே முடக்கி வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்திட்டங்கள்:விவசாயத்தை மேம்படுத்த உதவும் இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபரில் பாமக நடத்திய முழு அடைப்புப் போராட்டத்திற்குப் பிறகும் அரசு ஆர்வம் காட்டவில்லை. தருமபுரியில் சிப்காட் வளாகம் அமைப்பதற்காக 1733 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தும், தொழிற்சாலைகளைத் தொடங்குவதில் திமுக அரசு தாமதம் செய்வதாகக் குற்றம்சாட்டினார்.
1941 முதல் நிலுவையில் உள்ள இந்த ரயில் பாதை திட்டத்திற்காக, தேவையான நிலத்தைக் கையகப்படுத்த அரசு அலட்சியம் காட்டுவதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தப் பணியும் நடக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எண்ணேகோல் புதூர், தும்பலஅள்ளி, பஞ்சப்பள்ளி, புலிக்கரை மற்றும் ஆனைமடுவு அணை போன்ற நீர்ப்பாசனத் திட்டங்களையும் அரசு செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"தருமபுரி மாவட்ட மக்களும் தமிழ்நாடு குடிமக்கள் தான். அவர்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தான் அரசு செயல்படுகிறது. அதனால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, காவிரி உபரிநீர் திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் மொரப்பூர் ரயில் பாதை திட்டங்களுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைய விழாவில் வெளியிட வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.