அப்பாவி வணிகர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் - டைமன் ராஜா கோரிக்கை!
தடை செய்யபட்ட பொருட்களை விற்கும் வணிகர்கல் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என டைமன் ராஜா வெள்ளையன் கோரிக்கை வைத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருபுவனம் வணிகர் சங்கத்தின் 36வது ஆண்டு விழா திருபுவனம் வணிகர்
சங்க தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. திருபுவனம் வணிகர் சங்க அவைத்தலைவர் ராஜா, பொருளாளர் குமார், துணை தலைவர் செந்தில், துணைச்செயலாளர் ரமேஷ், சங்க ஆலோசகர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை விகித்தனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் டைமன் ராஜா வெள்ளையன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும். வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . இதனை குறித்து வணிகர் சங்கம் 36 வது ஆண்டு விழா கொண்டாடபட்டது என தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதற்கு வணிகர்கள் மீது தற்போது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏதோ திருடர்களைப் போல வணிகர்களை எண்ணுவதை தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தயாரிப்பவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு தெரியும். இருப்பினும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வது அராஜக போக்கை காட்டுகிறது.
அப்பாவி வணிகர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்தவில்லை என்றால் நிச்சயமாக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சொத்து வரி தொழில் வரி மற்றும் ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை வணிகர்கள் மீது சுமத்தப்பட்டு வருகிறது. இது அத்தனையையும் நீக்க வேண்டும். போதை கலாச்சாரத்தை தமிழகத்தில் அடியோடு ஒழித்தால் மட்டுமே சாமானிய வணிகர்கள் பாதுகாப்போடு வாழ முடியும் எனவும் கூறினார்.