For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#StockMarket | புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி!

09:50 AM Sep 26, 2024 IST | Web Editor
 stockmarket   புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்  நிஃப்டி
Advertisement

பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை இன்று எட்டின.

Advertisement

அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் காணப்படும் வர்த்தக செயல்பாடுகளின் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலிக்கிறது. மறுபுறம் இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவு முதலீடு செய்தது, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றிய நம்பிக்கையான கணிப்புகள், இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகளில் சிறப்பான வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் அதிக எழுச்சியுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: “ஜார்க்கண்டில் மத கலவரங்களை உருவாக்க பாஜக திட்டம்” – முதலமைச்சர் #HemantSoren குற்றச்சாட்டு!

பங்குச் சந்தை வணிகம் கடந்த சில நாள்களாக உயர்வுடனே காணப்படுகிறது. இந்த சூழலில், இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 85 ஆயிரம் புள்ளிகளை கடந்தும், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 26 ஆயிரம் புள்ளிகளை கடந்தும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement