For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்-கோரிக்கை வைத்த மாணவிக்கு தேடி வந்த உதவித்தொகை

07:37 PM Oct 31, 2023 IST | Student Reporter
கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர் கோரிக்கை வைத்த மாணவிக்கு தேடி வந்த உதவித்தொகை
Advertisement

கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சரிடம்,  கோரிக்கை வைத்த மாணவிக்கு  உயர்கல்வி உதவித்தொகை தேடி வந்துள்ளது.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள்
செல்வம் - தனலட்சுமி தம்பதியினர். இவர் தனியார் விளையாட்டு பயிற்சி
நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். செல்வம் மற்றும் தனலட்சுமி தம்பதியினருக்கு 2 பெண்கள்  குழந்தைகள் உள்ளனர்.  இவர்களுடைய இரண்டாவது மகள் கிருத்திகா வண்டலூர் தனியார் கல்லூரி ஒன்றில் பி. காம் படித்து வருகிறார்.

இந்த நிலையில், கிருத்திகா உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை குறித்து மனு
அளிக்க கடந்த 18ஆம் தேதி, காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு
சென்றுள்ளார். அன்றைய தினம் சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம்,  மறைமலை நகரில் நடைபெற்றது. கள ஆய்வுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், திடீரென காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு,  அதிகாரிகளிடம் வளர்ச்சி பணிகள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

அந்த சமயத்தில், அங்கிருந்த பொது மக்களிடமும் குறைகளை கேட்டு அறிந்தார். அதேபோன்று மாணவி கிருத்திகாவிடமும் எதற்காக இங்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.  கிருத்திகா தான் உயர்கல்வி படிப்பதற்கு உதவித்தொகை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனை அறிந்த முதலமைச்சர் உடனடியாக அருகில் இருந்த அரசு அதிகாரிகளிடம் மாணவிக்கு,  அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து,  மாவட்ட சமூக நல துறையின் சார்பில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து
மாணவியின் உயர் கல்விக்காக முப்பதாயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்
வழங்கினார்.  இதற்காக, தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவி நெகிழ்ச்சியுடன் நன்றி
தெரிவித்துக் கொண்டார்.

Tags :
Advertisement