Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை - நெல்லையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

06:40 PM Dec 18, 2023 IST | Web Editor
Advertisement

பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல்லையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: தொடர் கனமழை | தென் மாவட்டங்களில் உதவிகள் கோர வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு!

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்திலும் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.  இதனிடையே மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலிக்கு விரைந்தார்.

செல்லும் வழியில்,  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து,  அங்குள்ள மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.  தொடர்ந்து, அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


இதனைத் தொடர்ந்து  தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மழைநீர் சூழ்ந்த திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர்  நேரில் ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது..

“ மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மழை வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்யும் பணி நடைபெறும்.  ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயிலில் சிக்கி உள்ளவர்களுக்கு உணவு பொட்டலங்கள் விரைவில் வழங்கப்படும்”  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
Heavy rainfallheavy rainsKanyakumari Rainsminister udhayanidhi stalinNellaiNellai FloodsNews7Tamilnews7TamilUpdatesrain alertrainfallTamilnadu RainsTenkasi RainsThoothukudiThoothukudi RainsTirunelveli Rains
Advertisement
Next Article