For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குரூஸ் பர்னாந்தீஸின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

04:02 PM Nov 13, 2023 IST | Student Reporter
குரூஸ் பர்னாந்தீஸின் திருவுருவச்சிலையை  திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

குரூஸ் பர்னாந்தீஸின் திருவுருவச்சிலையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Advertisement

தூத்துக்குடி, மாபெரும் மாநகரம் ஆவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் குரூஸ் பர்னாந்தீஸ். தூத்துக்குடி மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காகவும், மாநகர வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார்  இவர். இக்காரணங்களால்  தூத்துக்குடி மாநகர “மக்களின் தந்தை” என அழைக்கப்பட்டார் . இவர் வாங்கிய பட்டங்கள் ராவ் சாகிப், ராவ் பகதூர் ஆகும்.

தூத்துக்குடி மக்களின் மாநகர வளர்ச்சிக்காக பாடுபட்ட ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்க்கு  நகரின் மையப்பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என மீனவ மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.  அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரூஸ் பர்னாந்தீஸ்க்கு மணிமண்டபம் அமைக்கப்படும்  என அறிவித்தார். இதற்காக ரோச் பூங்காவில் மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நகரின் மையப்பகுதியில் அமைக்காமல், ரோச் பூங்காவில் உருவச்சிலை அமைப்பதற்கு அனைத்து தரப்பு மக்களும்  எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில்,  தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர் பூங்காவில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து,  ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்க்கு  ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலை மணிமண்டபம்  தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் அமைக்கப்பட்டது.  குவிமாடத்துடன் கூடிய இத்திருவுருவச்சிலையினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 14.11.2023 அன்று  சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

Tags :
Advertisement